பொன்னேரியில் 'மோன்ட்ரா எலக்ட்ரிக்' ஆலை
பொன்னேரியில் 'மோன்ட்ரா எலக்ட்ரிக்' ஆலை
பொன்னேரியில் 'மோன்ட்ரா எலக்ட்ரிக்' ஆலை
ADDED : மார் 13, 2025 01:08 AM

திருவள்ளூர்:'மோன்ட்ரா எலக்ட்ரிக்' நிறுவனத்தின் இலகு ரக மின் வாகன பிரிவான 'டிவோல்ட் எலக்ட்ரிக்' நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புதிய ஆலையை துவக்கி உள்ளது. இந்த நிறுவனங்கள், 'முருகப்பா' குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆலை, சென்னையில் இருந்து 35 கி.மீ., தொலைவில், கோல்கட்டா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், ஆண்டுக்கு 50,000 இலகு ரக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்.
இங்கு முதற்கட்டமாக, மோன்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் 'இவியேட்டர்' என்ற இலகு ரக மின்சார வாகனம் உற்பத்தி செய்யப் படுகிறது. இது, ஒரே சார்ஜில் 170 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளும்.
மோன்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனம், இலகு ரக, நடு ரக, மற்றும் கனரக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் என ஐந்து பிரிவுகளில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம், 2020 முதல் சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் மானேசரில் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில், மொத்தம் 3,000 பேர் பணியாற்றுகின்றனர். நாடு முழுதும், 250க்கும் அதிகமான விற்பனை மையங்களை இந்நிறுவனம் வைத்துள்ளது.