சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலை: அரசு பரிசீலனை
சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலை: அரசு பரிசீலனை
சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலை: அரசு பரிசீலனை
ADDED : ஜூலை 27, 2024 11:42 PM

மும்பை:“சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து, அடுத்த சில நாட்களில் அரசு முடிவெடுக்கும்,” என மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் லாபகரமான நியாய விலை ஆண்டுதோறும் உயர்த்தப்பட்ட போதிலும், சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலை கடந்த 2019ம் ஆண்டு முதல் மாறாமல், கிலோ ஒன்றுக்கு 31 ரூபாயாக உள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆலைகள் இயங்குவதற்கு ஏற்ற வகையில், இந்த குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்தி வழங்குமாறு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தி வருகிறது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்மாநாட்டில் பங்கேற்ற ஜி - 20 அமைப்புக்கான இந்திய துாதர் அமிதாப் காந்த் கூறியதாவது:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சர்க்கரை உற்பத்தி துறை 1.10 சதவீதம் பங்களிக்கிறது. இது, எரிசக்தி மாற்றம், சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் கார்பன் உமிழ்வு நிகர பூஜ்ஜியத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆகையால், சர்க்கரை உற்பத்தித் துறைக்கு, நிலையான கொள்கை முடிவு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.