Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சேலத்தில் 'மினி டைடல் பார்க்' ஐ.டி., நிறுவனங்கள் முன்பதிவு

சேலத்தில் 'மினி டைடல் பார்க்' ஐ.டி., நிறுவனங்கள் முன்பதிவு

சேலத்தில் 'மினி டைடல் பார்க்' ஐ.டி., நிறுவனங்கள் முன்பதிவு

சேலத்தில் 'மினி டைடல் பார்க்' ஐ.டி., நிறுவனங்கள் முன்பதிவு

ADDED : ஜூலை 21, 2024 02:52 AM


Google News
Latest Tamil News
சென்னை:சென்னை தரமணியில், தமிழக அரசின் டைடல் பார்க் கட்டடம் உள்ளது. அங்கு, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மாநிலம் முழுதும், ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, முக்கிய நகரங்களில், 'மினி டைடல் பார்க்' கட்டடங்களை, அரசு கட்டி வருகிறது.

அதன்படி, சேலம் மாவட்டம், கருப்பூரில், 55,000 சதுர அடியில், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் மினி டைடல் பார்க் கட்டும் பணி, 2023 மே மாதம் துவங்கியது. திட்டச் செலவு, 30 கோடி ரூபாய்.

தற்போது, கட்டுமானப் பணிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, அங்கு தொழில் துவங்கும் வகையில், ஐ.டி., நிறுவனங்களுக்கு அலுவலக இடம் ஒதுக்கீடு செய்யும் முன்பதிவை, டைடல் பார்க் துவக்கியுள்ளது. இதனால், 500 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us