காதி விற்றுமுதல் ரூ.1.56 லட்சம் கோடி
காதி விற்றுமுதல் ரூ.1.56 லட்சம் கோடி
காதி விற்றுமுதல் ரூ.1.56 லட்சம் கோடி
ADDED : ஜூலை 11, 2024 01:30 AM

புதுடில்லி: காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் விற்றுமுதல், கடந்த நிதியாண்டில் 1.50 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக, அதன் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இதே காலகட்டத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2013 - 14ம் நிதியாண்டில், 31,154 கோடி ரூபாயாக இருந்த காதி விற்பனை, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 1.56 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நிறுவனத்தின் உற்பத்தி 315 சதவீதமும்; விற்பனை 400 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கமும் 81 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் முதல்முறையாக, 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இவை, நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவின.
கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் காதியின் தயாரிப்புகளுக்கான தேவை சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதை, இந்த புள்ளிவிபரங்கள் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.