புலம்பெயர்ந்தோருக்கு சகாயமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்
புலம்பெயர்ந்தோருக்கு சகாயமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்
புலம்பெயர்ந்தோருக்கு சகாயமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்
ADDED : ஜூலை 10, 2024 12:58 AM

புதுடில்லி: உலகளவில் புலம்பெயர்ந்தோருக்கு வாழ்வதற்கு ஏற்ற சகாயமான நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடம் பெற்று உள்ளதாக, 'இன்டர்நேஷன் ஸ்டடி' தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைத் தரம், டிஜிட்டல் வாழ்க்கை, வீடு மற்றும் மொழி, தொழில் வாய்ப்புகள், சம்பளம் மற்றும் வேலை பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், புலம்பெயர்ந்தோர் சகாயமான வாழ்க்கை நடத்த ஏற்ற நாடுகள் குறித்து, இன்டர்நேஷன் ஸ்டடி தகவல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்படி, உலகளவில் வியட்நாம் தொடர்ந்து 4வது ஆண்டாக, முதல் இடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் 174 இடங்களில், 12,000த்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினரிடம் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில், அவர்களிடம், வாழ்க்கை செலவு, நிதி நிலைமையில் திருப்தி மற்றும் வசதியான வாழ்க்கைக்கு செலவழிப்பதற்கான தேவையான குடும்ப வருமானம் என்ற மூன்று பிரிவுகளில், அவர்கள் தனிப்பட்ட முறையில் திருப்தி அடைந்தது குறித்து வரிசைப்படுத்துமாறு கேள்வி கேட்கப்பட்டது.
இதனடிப்படையில் பெறப்பட்ட பதில்கள், கடந்த ஆண்டை விட பெரிய அளவில் மாற்றமின்றி உள்ளதாக, ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில், முதல் 10 இடங்களில் 6 இடங்களை ஆசிய நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகியவை பிடித்துள்ளன.