வருமான வரி போலி மெயில்கள் எச்சரிக்கை!
வருமான வரி போலி மெயில்கள் எச்சரிக்கை!
வருமான வரி போலி மெயில்கள் எச்சரிக்கை!
ADDED : ஜூன் 03, 2024 01:15 AM

வருமான வரித்துறையிடம் இருந்து வருவது போன்ற தோற்றத்தை அளித்து, ஏமாற்ற முயற்சிக்கும் மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருப்பதோடு, இத்தகைய போலி மெயில்களை அடையாளம் காண்பதும் அவசியமாகும்.
வருமான வரி தொடர்பான நோட்டீஸ் அல்லது வேறு எச்சரிக்கை கொண்ட எந்த மெயிலாக தோன்றினாலும், முதலில் அதன் உள்ளடக்கத்தை பொறுமையாக படித்து பார்க்க வேண்டும். ஏனெனில், பயனாளிகளின் பதற்றமே மோசடியாளர்களுக்கு சாதகமாக அமைகிறது.
மெயிலின் விபரங்களை கூர்ந்து கவனித்தாலே அது உண்மையானதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வருமான வரித்துறை அனுப்பும் மெயில்களுக்கு என்று நெறிமுறைகள் இருப்பதையும் அறிய வேண்டும். அனைத்து விதமான நோட்டீஸ்களும் ஆவண அடையாள எண் கொண்டிருக்கும்.
அதே போல, மெயில் விபரத்தை வரித்துறை இணைய தளத்திலும் உறுதி செய்து கொள்ளலாம். இணையதளத்திலும் மெயில்கள் பதிவேற்றப்பட வேண் டும். இணையதள உறுப்பினர் பக்கத்தில் இதை சரி பார்க்கலாம்.
மேலும், மெயில்கள் அனைத்தும், குறிப்பிட்ட பிராந்தியம் சார்ந்த அதிகாரப்பூர்வ முகவரியில் இருந்து அனுப்பி வைக்கப்படும். பொதுவாக தோன்றும் மெயில் முகவரிகளில் இருந்து வராது. நோட்டீசின் அதிகாரப்பூர்வ தன்மையையும் இணையதளம் வாயிலாக உறுதி செய்து கொள்ள முடியும்.