மே மாதம் ஜி.எஸ்.டி., வசூல் 1.73 லட்சம் கோடி ரூபாய்
மே மாதம் ஜி.எஸ்.டி., வசூல் 1.73 லட்சம் கோடி ரூபாய்
மே மாதம் ஜி.எஸ்.டி., வசூல் 1.73 லட்சம் கோடி ரூபாய்
ADDED : ஜூன் 02, 2024 02:01 AM

புதுடில்லி:கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 10 சதவீதம் அதிகரித்து, 1.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டில் விற்பனை அதிகரித்த காரணத்தால், கடந்த மே மாத ஜி.எஸ்.டி., வசூல், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகரித்து, 1.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகள் வாயிலாக பெறப்பட்ட ஜி.எஸ்.டி., 15.30 சதவீதம் அதிகரித்தது. எனினும், இறக்குமதி 4.30 சதவீதம் சரிந்தது.
நடப்பு நிதியாண்டில், மே வரையிலான ஜி.எஸ்.டி., வசூல் 3.83 லட்சம் கோடி ரூபயாக உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 11.30 சதவீத வளர்ச்சியாகும்.
ஜி.எஸ்.டி., வருவாய் கடந்த ஏப்ரலில், 2.10 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதுவே ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச வசூல். கடந்த 2024ம் நிதியாண்டுக்கான, மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 20.18 லட்சம் கோடி ரூபாய்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.