எச்.எம்.டி., போன்கள் இந்தியாவில் தயாரிப்பு
எச்.எம்.டி., போன்கள் இந்தியாவில் தயாரிப்பு
எச்.எம்.டி., போன்கள் இந்தியாவில் தயாரிப்பு
ADDED : ஜூலை 27, 2024 03:05 AM

புதுடில்லி: 'நோக்கியா' போன் தயாரிப்பாளரான எச்.எம்.டி., நிறுவனம், தனது அனைத்து வகை புதிய ஸ்மார்ட் போன்களையும் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி ஜீன் பிராங்கோயிஸ் பேரில் தெரிவித்துள்ளார்.
எச்.எம்.டி., நிறுவனம், சமீபத்தில் தனது 'கிரெஸ்ட்' மற்றும் 'கிரெஸ்ட் மேக்ஸ்' ரக போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதை அறிமுகம் செய்து வைத்த பின், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்கள், உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதை எச்.எம்.டி., நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரெஸ்ட் ரக போன்கள் இந்திய சந்தைக்காகவும், வெளிநாட்டு சந்தைக்காகவும் தயாரிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் இருந்து நோக்கியா மொபைல் போன்களை எச்.எம்.டி., ஏற்றுமதி செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து எச்.எம்.டி.,யின் புதிய ஸ்மார்ட் போன்களும் இனி
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதிசெய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.