பசுமை நீர் மின் நிலையம்; பூடானில் அமைக்கும் 'அதானி'
பசுமை நீர் மின் நிலையம்; பூடானில் அமைக்கும் 'அதானி'
பசுமை நீர் மின் நிலையம்; பூடானில் அமைக்கும் 'அதானி'
ADDED : ஜூன் 18, 2024 04:09 AM

புதுடில்லி : அதானி குழுமம், பூடான் நாட்டில் 570 மெகாவாட் திறன் கொண்ட பசுமை நீர் மின் நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியும், பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கேயும் கையெழுத்திட்டுள்ளனர்.
பூடான் சென்றுள்ள கவுதம் அதானி, அந்நாட்டு மன்னரையும், பிரதமரையும் தனித்தனியே சந்தித்து உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: பூடான் மன்னருடனான சந்திப்பு முற்றிலும் சிறப்பாக அமைந்தது. இந்த சந்திப்பின் போது, பூடானின் சுகா மாகாணத்தில், 570 மெகாவாட் திறன் கொண்ட பசுமை நீர் மின் நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். எதிர் வரும் காலங்களில், இன்னும் பல உள்கட்டமைப்பு திட்டங்களில் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளேன்.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டேன். மிகப் பெரிய கணினி மையங்கள், தரவு மையங்கள் உள்ளிட்டவற்றை கொண்ட கெலெபு நகருக்கான திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.