சில வகை ஆபரண இறக்குமதிக்கு அரசு தடை
சில வகை ஆபரண இறக்குமதிக்கு அரசு தடை
சில வகை ஆபரண இறக்குமதிக்கு அரசு தடை
ADDED : ஜூன் 13, 2024 01:16 AM

புதுடில்லி:இந்தோனேஷியா, தான்சானியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை ஆபரண தங்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேநேரம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும்பட்சத்தில் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும்.
முத்துக்கள் பதிக்கப் பட்ட தங்க நகைகள், சில வகையான வைரங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதிக்கு, இறக்குமதிக்கான கொள்கையில் உள்ள இலவச இறக்குமதி என்பது விலக்கப்பட்டுள்ளது-. மேலும், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது-.
தடை செய்யப்பட்ட இந்த வகையிலான பொருட்களின் இறக்குமதிக்கு, அரசின் உரிமம் அல்லது அனுமதி பெற வேண்டும்.