முதல் முறையாக ஸ்நைப்பர் துப்பாக்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
முதல் முறையாக ஸ்நைப்பர் துப்பாக்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
முதல் முறையாக ஸ்நைப்பர் துப்பாக்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
ADDED : ஜூலை 11, 2024 01:38 AM

புதுடில்லி: இந்தியாவிலிருந்து முதல் முறையாக 'ஸ்நைப்பர்' ரக துப்பாக்கிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த சிறு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான எஸ்.எஸ்.எஸ்., டிபென்ஸ், இந்தியாவின் அண்டை நாடு ஒன்றுக்கு ஸ்நைப்பர் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.
இதுமட்டுமல்லாமல், வெடிமருந்து தயாரிப்பதற்காக, பல்வேறு நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 415 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, எஸ்.எஸ்.எஸ்., டிபென்ஸ் நிறுவனம், '338 லாபுவா மேக்னம் காட்ரிஜ் ஸ்நைப்பர்' துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்ய உள்ளது. 1,500 மீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளை தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த துப்பாக்கிகள், முழுதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் கிட்டத்தட்ட 30 நாடுகள், இந்த ஸ்நைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதால், இதற்கான ஏற்றுமதி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வெளிநாட்டுக்கு ஸ்நைப்பர் துப்பாக்கிகளை நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறை.
நம் நாடு தற்போது பீரங்கித் துப்பாக்கிகள் முதல், ஏவுகணை அமைப்புகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் வரை, ஏராளமான உபகரணங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது. சமீபகாலம் வரை, நாம் இவற்றின் இறக்குமதியாளராக இருந்த நிலையில், தற்போது ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கமுன்னேற்றம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.