'சைவ தோல்' உற்பத்திக்கு மாற 'பீட்டா' வலியுறுத்தல்
'சைவ தோல்' உற்பத்திக்கு மாற 'பீட்டா' வலியுறுத்தல்
'சைவ தோல்' உற்பத்திக்கு மாற 'பீட்டா' வலியுறுத்தல்
ADDED : ஜூலை 11, 2024 01:37 AM

புதுடில்லி: விலங்குகளின் தோல் பயன்பாட்டிற்கு மாற்றாக, கரும்பு கழிவில் இருந்து தயாரிக்கப்படும், சைவ தோல் உற்பத்திக்கான பயன்பாட்டை விரிவுபடுத்தலாம் என, விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா இந்தியா' வலியுறுத்திஉள்ளது.
'பி.ஏ., புட்வேர் நிறுவனம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்டிசிப்பிளினரி சயின்ஸ் அண்டு டெக்னாலஜி'யுடன் இணைந்து, விலங்குகளின் தோலுக்கு மாற்றாக, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கரும்பு கழிவுகளில் இருந்து, 'வீகன் விர்யா' என்ற சைவ தோல்களை உருவாக்கியுள்ளது. இதை பீட்டா இந்தியா அங்கீகரித்து, சான்று வழங்கியுள்ளது.
இந்தியாவில் 550 முதல் 600 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது.
உலகளவில் கரும்பு உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திலும், சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய கரும்பு கழிவுகளை, பி.ஏ., புட்வேரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தோல் மற்றும் கம்பளி போன்ற மாசு ஏற்படுத்தக் கூடிய பொருட்களுக்கு மாற்றாக, சைவ தோல்கள் உற்பத்திக்காக விரிவுபடுத்தலாம் என, பீட்டா இந்தியா தெரிவித்து உள்ளது.
சைவ தோல்கள் தயாரிப்பு, பேஷன் துறையினர் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், இந்தியா தனது விவசாய வலிமையை பயன்படுத்தவும் உதவும் என்று தொழில்துறையினர் கருத்து தெரிவித்துஉள்ளனர்.
விலங்குகளின் தோலுக்கு மாற்றாக, தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கரும்பு கழிவுகளில் இருந்து, 'வீகன் விர்யா' என்ற சைவ தோல் உருவாக்கப் பட்டுள்ளது