திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நிறுவனம் முடக்கப்படும்: பைஜூ ரவீந்திரன்
திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நிறுவனம் முடக்கப்படும்: பைஜூ ரவீந்திரன்
திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நிறுவனம் முடக்கப்படும்: பைஜூ ரவீந்திரன்
ADDED : ஜூலை 21, 2024 02:55 AM

புதுடில்லி:திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால், 'பைஜூஸ்' நிறுவனம் முடக்கப்படும் சூழல் உருவாகும் என, அதன் தலைமைச் செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரன் தெரிவித்துஉள்ளார்.
ஏற்கனவே கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கல்விப் பயிற்சிகள் வழங்கும் பைஜூஸ் நிறுவனத்துக்கு, தற்போது மேலும் ஒரு பிரச்னை எழுந்து உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்து வந்த பைஜூஸ், கிட்டத்தட்ட 158 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்று கூறி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., புகார் அளித்திருந்தது.
பி.சி.சி.ஐ., அளித்த புகாரின் பேரில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், பைஜூஸ் மீது திவால் நடவடிக்கையை துவங்கிஉள்ளது.
இதற்கிடையே இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி, பைஜூ ரவீந்திரன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் காரணமாக, பைஜூஸ் ஆன்லைன் தளங்களை பராமரிக்க முக்கிய சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், அதனை நிறுத்தக்கூடும் என்றும், இது ஒட்டுமொத்த வணிகத்தையே முடக்க வழிவகை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த மூன்று மாதத்துக்குள் பி.சி.சி.ஐ.,க்கு இந்த தொகையை செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.