சீனாவின் 3 தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவின் 3 தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவின் 3 தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
ADDED : ஜூன் 29, 2024 12:47 AM

புதுடில்லி:'ஹைட்ராலிக் ராக் பிரேக்கர்' உட்பட மூன்று சீன தயாரிப்புகளுக்கு, இந்தியா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ராலிக் ராக் பிரேக்கர் எனும் பாறை உடைக்கும் இயந்திரம், சீனாவில் இருந்து மலிவான விலையில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவதாக, உள்நாட்டு தயாரிப்பாளர்கள் புகார் எழுப்பினர்.
இதையடுத்து, டி.ஜி.டி.ஆர்., எனும் வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குனரகத்தின் விசாரணை முடிவில், இப்பொருளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் ராக் பிரேக்கர் இயந்திரம், இடித்தல், பாறை உடைத்தல், சுரங்கப் பணி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதன் அதிகப்படியான இறக்குமதியால், உள்நாட்டு தொழிற்துறையினர் பாதிக்கப்படுவதை அடுத்து, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் 'டின் பிளேட்களின் மூடி (ஈசி ஓப்பன் எண்டு), டெலஸ்கோபிக் சேனல் டிராயர் சிலைடர்' ஆகிய பொருட்களுக்கும் இந்த வரி விதிக்கப்பட்டு உள்ளது.