சக்கிமங்கலம் தொழிற்பேட்டை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
சக்கிமங்கலம் தொழிற்பேட்டை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
சக்கிமங்கலம் தொழிற்பேட்டை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 18, 2024 01:30 AM

சென்னை:மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் தொழில் துவங்க, 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருப்பதால், குலுக்கல் முறையில் மனைகளை ஒதுக்கீடு செய்ய, 'சிட்கோ' முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் சிட்கோ எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை அமைக்கிறது. தமிழகம் முழுதும் சிட்கோ, 8,600 ஏக்கரில், 130 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில், 33 ஏக்கரில், 98 தொழில் மனைகளுடன், சக்கிமங் கலம் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, மனைகளை விற்கும் பணி துவங்கிஉள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 1.43 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பம் பெறப்பட்டதில், 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஒரு தொழில் மனைக்கு, மூன்று, நான்கு பேர் போட்டி யிடுகின்றனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வாகும் நபர்களுக்கே மனைகளை ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.