ரூ.916 கோடி லாபம் ஈட்டிய 4 தமிழக அரசு நிறுவனங்கள்
ரூ.916 கோடி லாபம் ஈட்டிய 4 தமிழக அரசு நிறுவனங்கள்
ரூ.916 கோடி லாபம் ஈட்டிய 4 தமிழக அரசு நிறுவனங்கள்
ADDED : ஜூலை 04, 2024 11:41 PM

சென்னை:தமிழக அரசின், 'டிட்கோ, சிப்காட், டி.என்.பி.எல்., டிக்' ஆகிய நிறுவனங்கள், கடந்த ஆண்டில் 916 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் பூங்காக்களை ஏற்படுத்தி, அங்குள்ள தொழில்மனைகளை, பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறது.
'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, தொழிற் பூங்கா உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுஉள்ள நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
'டிக்' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டுக் கழகம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. டி.என்.பி.எல்., நிறுவனம், காகித உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறது.