12 புதிய தொழில் நகரங்கள் ஆந்திரா, பீஹாருக்கு வாய்ப்பு
12 புதிய தொழில் நகரங்கள் ஆந்திரா, பீஹாருக்கு வாய்ப்பு
12 புதிய தொழில் நகரங்கள் ஆந்திரா, பீஹாருக்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 27, 2024 03:09 AM

புதுடில்லி:சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிதாக 12 தொழில்
நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இத்திட்டம் தொடர்பாக ஆலோசிக்க, மத்திய அமைச்சரவையை சந்திக்க உள்ள தாக, மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது.
டி.பி.ஐ.ஐ.டி., என அழைக்கப்படும் இத்துறையின் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்ததாவது:
நாட்டில் ஏற்கனவே எட்டு தொழில் நகரங்கள் செயல்பாட்டுக்கு வரும் தருவாயில் இருக்கின்றன. இவற்றில் நான்கு நகரங்களில் அடிப்படை கட்டமைப்புகள் முடிக்கப்பட்டு, நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள நான்கு நகரங்களில் சாலை, நீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நகரங்கள் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் அமைந்துள்ளன.
இதுபோன்ற தொழில்துறை நகரங்கள், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தயாரிப்பு துறையின் பங்கையும்; வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க உதவும்.
இந்நிலையில், பட் ஜெட்டில் மேலும் 12 தொழில் நகரங்கள் அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 நகரங்கள் ஆந்திராவிலும், ஒன்று பீஹார் மாநிலத்திலும் அமைக்கப்பட இருக்கிறது. இதையடுத்து மொத்தம் 20 நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக ஆலோசிக்க மத்திய அமைச்சரவையை சந்திக்க உள்ளோம். இதனை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் தயாராக உள்ளது. நிலம் மாநில அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு ஒப்புதல்வழங்கும்பட்சத்தில், இதற்கான பணிகள் துவங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.