'இன்டெக்' தொழில் கண்காட்சி: ரூ.800 கோடி வர்த்தக இலக்கு
'இன்டெக்' தொழில் கண்காட்சி: ரூ.800 கோடி வர்த்தக இலக்கு
'இன்டெக்' தொழில் கண்காட்சி: ரூ.800 கோடி வர்த்தக இலக்கு
ADDED : ஜூன் 01, 2024 07:06 AM
கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில், 20-வது, 'இன்டெக்- - 2024' சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி, வரும் 6ல் துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது.
'கொடிசியா' தலைவர் சிவஞானம், செயலாளர் சசிகுமார், இன்டெக் கண்காட்சி தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் பொன்னுச்சாமி, குளோபல் மெனுபேக்சுரர்ஸ் கிளஸ்டர் விஷன் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை கொடிசியா வளாகத்தில் 25,000 சதுர மீட்டரில் 20-வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி, வரும் 6-ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் அமெரிக்கா, தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் நிறுவனங்கள் இயந்திரங்களை அறிமுகப்படுத்துகின்றன.
இக்கண்காட்சியில், 495 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 800 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
தொழில்துறை சார்ந்தவர்கள், காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பங்கேற்கலாம். பொதுமக்கள் மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். மாணவர்கள், வரும் 10ம் தேதி மதியம் 2:00 மணி முதல் அடையாள அட்டையை காண்பித்து, இலவசமாக பார்வையிடலாம். அதேபோல் பொது பார்வையாளர்கள், மதியம் 2:00 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவர். நுழைவுக் கட்டணம், 150 ரூபாய் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.