Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/'ஸ்டார்ட் அப்' துவங்குவதற்கு உகந்த சூழலில் சென்னை

'ஸ்டார்ட் அப்' துவங்குவதற்கு உகந்த சூழலில் சென்னை

'ஸ்டார்ட் அப்' துவங்குவதற்கு உகந்த சூழலில் சென்னை

'ஸ்டார்ட் அப்' துவங்குவதற்கு உகந்த சூழலில் சென்னை

ADDED : ஜூன் 10, 2024 11:28 PM


Google News
சென்னை : ஆசியாவில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனம் துவங்க உகந்த சூழல் நிலவுவதில், சென்னை, 18வது இடத்தில் இருப்பதாக, 'ஸ்டார்ட் அப் ஜெனோம்' மற்றும் உலக தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவன செய்திக் குறிப்பு: சர்வதேச அளவில், புத்தாக்க சூழல் அமைப்பு மேம்பாட்டு நிறுவனமாக, 'ஸ்டார்ட் அப் ஜெனோம்' திகழ்கிறது. இந்நிறுவனம், மொத்தம், 50 நாடுகளில், ஸ்டார்ட் அப் தொழில் துவங்குவதற்கு உகந்த 290 இடங்கள் குறித்தும், 35 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தது.

அதன் அடிப்படையில், ஆசிய பிராந்தியத்தில், ஸ்டார்ட் அப் தொழில் துவங்க உகந்த சூழல் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை, 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் 21 முதல், 30 இடங்களுக்குள் இருந்தது.

குறைந்த ஊதியத்தில், திறன்மிகு பணியாளர்கள் கிடைப்பதற்கான உகந்த சூழலுக்கான அளவீட்டில், உலகளவில், 25 இடங்களுக்குள் ஒன்றாகவும்; ஆசிய அளவில், 10 இடங்களுக்குள் ஒன்றாகவும் சென்னை திகழ்கிறது. நிதி பெறுவதில், ஆசிய அளவில், 20 இடங்களுக்குள் ஒன்றாக சென்னை இடம்பிடித்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவங்க உகந்த சூழல் நிலவுவதில், ஆசியாவில் 18வது இடத்திற்கு, சென்னை முன்னேறி உள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us