/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ நிதி மோசடி 3 மடங்கு அதிகரிப்பு நிதி மோசடி 3 மடங்கு அதிகரிப்பு

தங்கம்
ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு 57.12 சதவீதம் உயர்ந்து, 4.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 54.13 டன் தங்கத்தை வாங்கி உள்ளது. வங்கியின் மொத்த தங்க இருப்பு 879.58 டன்னாக அதிகரித்துள்ளது.
பணவீக்கம்
வினியோக தொடர் அழுத்தங்கள் குறைந்து வருவது, கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றின் விலை குறைந்து வருவது மற்றும் வழக்கத்தை விட அதிக பருவமழையால் விவசாய உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில், பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வழிவகுக்கும்.
ஏற்றுமதி
பாதுகாப்பில் கவனம், வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால்ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனினும், பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களும் விரைவில் கையெழுத்தாக உள்ள ஒப்பந்தங்களும், தாக்கத்தை குறைக்கும்.
இருப்பு நிலை
ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை 8.20 சதவீதம் உயர்ந்து 76.25 லட்சம் கோடி ரூபாயாக ஆனது. வருவாய் 22.77 சதவீதமும்; செலவினம் 7.76 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்னிய செலாவணி பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த வருவாய் 33 சதவீதம் அதிகரித்து 1.11 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது தவிர தங்கம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் அதிகரித்துள்ளன.
இ - ருபி
இ - ருபி என அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயத்தின் புழக்கம், கடந்த நிதியாண்டில் 334 சதவீதம் அதிகரித்து 1,016 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில்சோதனை முறையில் துவங்கப்பட்ட இத்திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிக புழக்கம்
(முதல் 3 நோட்டுகள்)