ADDED : ஜூலை 04, 2024 11:39 PM

புதுடில்லி: இந்திய சுற்றுலா பயணியர் இனி, ஐக்கிய அரபு எமிரேட்சில், யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என, என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணிக்கும் இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோர், கியு.ஆர்., குறியீடுகளை ஸ்கேன் செய்து, பணம் செலுத்தலாம் என, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய பணப்பட்டுவாடா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.ஐ.பி.எல்., எனப்படும், சர்வதேச பணப் பட்டுவாடா நிறுவனமும், 'நெட்வொர்க் இன்டர்நேஷனல்' எனும் டிஜிட்டல் வணிக நிறுவனமும் இணைந்து இச்சேவையை வழங்கி உள்ளன.
இதுவரை நேபாளம், இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் பூடான் ஆகிய ஆறு நாடுகளில், யு.பி.ஐ., அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்சிலும் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, மொத்த நாடுகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்து உள்ளது.