/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/நிதி சுதந்திரம் பெறும் இந்திய பெண்கள்நிதி சுதந்திரம் பெறும் இந்திய பெண்கள்
நிதி சுதந்திரம் பெறும் இந்திய பெண்கள்
நிதி சுதந்திரம் பெறும் இந்திய பெண்கள்
நிதி சுதந்திரம் பெறும் இந்திய பெண்கள்
ADDED : ஜூலை 08, 2024 12:28 AM

இந்திய பெண்களில் அதிகமானோர் நிதி சுதந்திரம் பெறுவதில் ஆர்வம் காட்டி, முதலீடு முடிவுகளை தாங்களே சொந்தமாக மேற்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம், தன் 10 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மேல் ஆய்வு நடத்தி, 'பெண்களின் முதலீட்டு பழக்கவழக்கம்' எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெண்களில், 72 சதவீதம் பேர் சுயேச்சையாக முதலீடு முடிவுகளை மேற்கொள்வதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இளம் வயதினர் மத்தியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.
பெண்கள் நீண்ட கால முதலீடு நோக்கம் கொண்டிருப்பதாகவும், நிதிநுட்ப சாதனங்களை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை, 14 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சிறிய நகரங்களில் உள்ள பெண்கள், வைப்பு நிதி உள்ளிட்ட பாரம்பரிய நிதி வாய்ப்புகளை நாடும் நிலையில் பெரிய நகரங்களில் உள்ள பெண்கள் பங்கு முதலீடு உள்ளிட்டவற்றை நாடுகின்றனர்.
மியூச்சுவல் பண்டு துறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு வருவதையும், குறிப்பாக பெண்கள் நிதி உத்திகளை புரிந்து கொண்டு செயல்படுவதை காண முடிவதாகவும் அறிக்கை தகவல்கள் உணர்த்துகின்றன.