/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ எதிர்கால இலக்குடன் சேமிக்கும் இந்தியர்கள் எதிர்கால இலக்குடன் சேமிக்கும் இந்தியர்கள்
எதிர்கால இலக்குடன் சேமிக்கும் இந்தியர்கள்
எதிர்கால இலக்குடன் சேமிக்கும் இந்தியர்கள்
எதிர்கால இலக்குடன் சேமிக்கும் இந்தியர்கள்
ADDED : ஜூன் 24, 2024 01:11 AM

இந்தியர்களில் பெரும்பாலானோர் சேமிப்பதை முக்கிய நிதி இலக்குகளில் ஒன்றாகக் கருதுவதும், 60 சதவீதத்திற்கு மேலானவர்கள் மாதந்தோறும் சேமிக்கும் வழக்கம் கொண்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
மணிவியூ நிறுவனம், இந்தியர்களின் நிதி செயல்முறையை அறிவதற்காக பல்வேறு அளவிலான வருமானம் கொண்டவர்கள் மத்தி யில் கருத்துக்கணிப்பு நடத்தி, 2024 சேமிப்பு அட்டவணை எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மாதம் 50,000க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் பிரிவில், 70 சதவீதத்தினர் மாதந்தோறும் சேமிப்பதும், 30,000க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் பிரிவில், 51 சதவீதத்தினர் மாதந்தோறும் சேமிப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 30 வயதுக்கு மேலானவர்கள் மாத வருமானத்தில் 25 சதவீதம் சேமிக்கின்றனர். குறைந்த வருமானம் பெறுபவர்கள், வருமானத்தின் பெரும்பகுதியை குடும்ப செலவுகளுக்காக செலவிடுகின்றனர்.
சேமிப்பை முக்கிய நிதி இலக்காக பலரும் கொண்டுள்ளனர். வீடு வாங்குவது, பிள்ளைகள் கல்வி, திருமண செலவு உள்ளிட்ட எதிர்கால இலக்குகளை மனதில் கொண்டு இவர்கள் சேமிப்பை மேற்கொள்வதும் தெரிய வந்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட வர்கள் வைப்பு நிதி உள்ளிட்ட வாய்ப்புகளை நாடுகின்றனர். அதிக வருமானம் பெறுபவர்கள் மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட வாய்ப்புகளை நாடுகின்றனர்.