/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ ஏ.டி.எம்., இயந்திரங்கள் தட்டுப்பாடு அரசிடம் முறையிடும் வங்கிகள் ஏ.டி.எம்., இயந்திரங்கள் தட்டுப்பாடு அரசிடம் முறையிடும் வங்கிகள்
ஏ.டி.எம்., இயந்திரங்கள் தட்டுப்பாடு அரசிடம் முறையிடும் வங்கிகள்
ஏ.டி.எம்., இயந்திரங்கள் தட்டுப்பாடு அரசிடம் முறையிடும் வங்கிகள்
ஏ.டி.எம்., இயந்திரங்கள் தட்டுப்பாடு அரசிடம் முறையிடும் வங்கிகள்
ADDED : ஜூன் 24, 2024 01:31 AM

புதுடில்லி,:ஏ.டி.எம்., இயந்திரங்களின் வினியோகத்தில் நிலவும் தட்டுப்பாடு குறித்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வங்கிகள் கொண்டு சென்றுஉள்ளன.
மேலும், மத்திய அரசின் இணையதளத்தின் வாயிலாக, ஏ.டி.எம்.,களை கொள்முதல் செய்வது சம்பந்தமான விதிகள் குறித்து தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டுஉள்ளன.
இது தொடர்பாக வங்கித்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
வங்கிகளுக்கு ஏ.டி.எம்., இயந்திரங்கள் வழங்கும் நிறுவனங்களிடம், அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் இல்லை.
இதற்கான முக்கிய காரணம், கடந்த 2020ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட 'மேக் இன் இந்தியா' வழிகாட்டுதல்கள் தான்.
இந்த வழிகாட்டுதல்களின்படி, இந்நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தயாரிப்பு ஆலையை துவங்கியிருக்க வேண்டும்.
பெரும்பாலான நிறுவனங்கள் அவ்வாறு மேற்கொள்ளாத நிலையில், ஏ.டி.எம்., வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மற்றொரு முக்கிய காரணம், பொதுத்துறை வங்கிகள் அனைத்துமே அரசின் இணையதளம் வாயிலாகவே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டாய விதி.
ஏ.டி.எம்., இயந்திரங்கள் தயாரிக்கும் சில நிறுவனங்கள் மட்டுமே இதில் பதிவு செய்துள்ளதால், ஆர்டர் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இதற்கான விதிகள் குறித்தும் வங்கிகளுக்கு போதுமான தெளிவு இல்லை.
நம் நாட்டின் ஏ.டி.எம்., சந்தை, நடப்பு 2024ம் ஆண்டு முதல் 2032ம் ஆண்டு வரை, 9.20 சதவீத ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு விரைவில் தீர்வு கான்பது அவசியமாகும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
* வங்கி கிளையோடு உள்ள ஏ.டி.எம்.,கள் 1,26,593
* பிரத்யேக ஏ.டி.எம்.,கள் 91,826
* மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளவை 40,000
* நிறுவுவதற்கான புதிய இடங்கள் தேர்வு 10,000
* நடப்பு நிதியாண்டின் முதல் பாதிக்குள் தேவை 15 - 18,000