
ஸ்பை திரில்லரான ஆல்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஆலியா பட்
பிரபல பாலிவுட் வாரிசு நடிகையான ஆலியா பட், தென்னிந்திய ரசிகர்களுக்கு "ஆர்.ஆர்.ஆர்" படத்தின் மூலம் நன்கு அறிமுகமானவர் தான். பார்ப்பதற்கு குழந்தை முகம் கொண்டவரைப் போல தோன்றினாலும், இதற்கு முன் "கங்குபாய் கத்தியாவாடி, ராசி, ஜிக்ரா" உள்ளிட்ட படங்களில் அதிரடியான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர். அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்பை திரில்லர் படமான "ஆல்பா"வில் ஒரு சீக்ரெட் ஏஜென்ட் போல அல்லாமல், ஒரு நெகட்டிவ் சாயல் கொண்ட கில்லர் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் தொடர்ந்து ஸ்பை யுனிவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் "பதான், டைகர், வார், கபீர்" ஆகிய படங்களின் வரிசையில் இந்த "ஆல்பா" திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் பாபி தியோல், அனில் கபூர், மாதவன் ஆகியோர் நடித்திருந்தாலும், கதாநாயகியை மையப்படுத்திய படமாக இது உருவாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!