
வசூலைக் குவிக்கும் ரன்வீர் சிங்கின் துரந்தர்
இந்த ஆண்டில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த ஹிந்திப் படமான "சாயாரா" 31 கோடியைப் பெற்றது. "துரந்தர்" 28 கோடியைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. 26/11 தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இந்திய ஏஜென்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதைச் சுருக்கம்.
இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகி இருப்பவர் சாரா அர்ஜுன். தமிழில் "தெய்வத் திருமகள், சைவம்" படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். "துரந்தர்" படத்தில் ரன்வீர் சிங், சாரா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வந்த போது இந்த ஜோடியின் வயது வித்தியாசம் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால், படம் வெளிவந்த பிறகு அது மறைந்து போனது.
மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை 130 கோடிக்கு நெட்பிளிக்ஸ் பெற்றுதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ரன்வீர் சிங்கின் படம் ஒன்று இந்த அளவிற்கு ஓடிடி உரிமைக்கு விற்கப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை. வருடக் கடைசியில் ஒரு ஹிட் படம் வந்துள்ளதால் பாலிவுட்டினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!