
ரூ.581 கோடி வசூல் பெற்ற சாயரா
இந்தியாவில் இதுவரையில் வெளிவந்த காதல் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். உலக அளவில் 581 கோடி வசூல் என்பதில் இந்தியாவில் மட்டும் 412 கோடி, வெளிநாடுகளில் 169 கோடி.
இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் "சாவா" ஹிந்திப் படம் 800 கோடி வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. அடுத்து 581 கோடியுடன் இப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்ப் படமான "கூலி" படம் 525 கோடியைக் கடந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட "சாயரா" படத்தை வெறும் 40 கோடியில் தயாரித்தது யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம். அது இதுவரையில் சூலித்துள்ளது 581 கோடி. அதே நிறுவனம் முன்னணி நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்க, 300 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரித்த "வார் 2" 350 கோடியை மட்டுமே கடந்து நஷ்டத்தைப் பெற வைத்துள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!