
தீபிகா படுகோனேவின் பிரக்னன்சி போட்டோஷுட்
பாலிவுட்டின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோனே, பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரி மாதம் தீபிகாவின் தாய்மை பற்றி இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் "கல்கி 2898 ஏடி" பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட தீபிகா கலந்து கொண்டார். அவரது "பேபி பம்ப்" புகைப்படத்தை எடுக்க பாலிவுட் புகைப்படக் கலைஞர்கள் பெரிதும் பிரயத்தனப்பட்டார்கள்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தீபிகாவின் கர்ப்பகால புகைப்பட போட்டோஷுட் ஒன்றை நடத்தி பல புகைப்படங்களை தீபிகா, ரன்வீர் ஜோடி வெளியிட்டுள்ளது. பல சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த மாதக் கடைசியில் தீபிகாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தகவல். இன்ஸ்டாவில் நேற்றிரவு அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் 50 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!