/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விலங்குகள், நீரை பாதுகாக்க நாயுடன் பாதயாத்திரை செல்லும் இளைஞர் விலங்குகள், நீரை பாதுகாக்க நாயுடன் பாதயாத்திரை செல்லும் இளைஞர்
விலங்குகள், நீரை பாதுகாக்க நாயுடன் பாதயாத்திரை செல்லும் இளைஞர்
விலங்குகள், நீரை பாதுகாக்க நாயுடன் பாதயாத்திரை செல்லும் இளைஞர்
விலங்குகள், நீரை பாதுகாக்க நாயுடன் பாதயாத்திரை செல்லும் இளைஞர்
UPDATED : மே 11, 2025 03:56 AM
ADDED : மே 10, 2025 11:39 PM

விலங்குகளை பாதுகாக்க, படிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, பெங்களூரை சேர்ந்த இளைஞர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் லடாக் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் சுமந்த் அஸ்வின், 22. வன விலங்குகள், செல்ல பிராணிகள் மீது அதிக அக்கறை கொண்டவர். இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த இவருக்கு, படிப்பில் ஆர்வம் ஏற்படவில்லை. விலங்குகள் மீது பாசம், தண்ணீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக, கன்னியாகுமரி முதல் லடாக் வரை பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார்.
கடந்தாண்டு மே மாதம், தனது பாதயாத்திரையை துவக்கினார். கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக இதுவரை 2,000 கி.மீ., பாதயாத்திரையாக பயணித்து உள்ளார்.
இன்ஸ்டாகிராம், முகநுால், யு-டியூப்பில் 'ஐ அம் இன்பினிட்டி - சுமந்த் அஸ்வின்' என்ற பெயரில், கணக்கு துவக்கி, தினந்தோறும் தன் பயண குறிப்பை பதிவேற்றம் செய்கிறார்.
இவ்வாறு அவர் நடந்து செல்லும் போது, தெரு நாய் ஒன்று பின் தொடர்ந்தது. தன்னிடம் இருந்த பிஸ்கட்டை கொடுத்தார். அதை சாப்பிட்ட நாய், மீண்டும் அவரை பின் தொடர்ந்தது.
விலங்குகள் மீது பாசம் வைத்துள்ள அவர், நாயை தன்னுடன் அழைத்து செல்கிறார். அதற்கு 'பைரவா' என்று பெயர் வைத்துள்ளார். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தினமும் அதிகாலை, மாலை நேரங்களில் 25 முதல் 30 கி.மீ., பயணிக்கிறார். பெட்ரோல் பங்க்குகள், கோவில் அருகில் இரவு நேரத்தில் ஓய்வு எடுத்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் இவருடன் பயணித்த நாய் சோர்வடைந்தது. இதனால் தன் தோளில் நாயை சுமந்தபடி பயணத்தை தொடர்ந்தார். இதை பார்த்த பலர், அவரிடம் விசாரித்தனர். தனது குறிக்கோளை அவர் விளக்கினார்.
இதனால் மனம் நெகிழ்ந்து போன பலரும் சேர்ந்து 'வீல்சேர்' வாங்கி கொடுத்துள்ளனர். தற்போது நாயை வீல் சேரில் வைத்து தள்ளி செல்கிறார்.
ஆரம்பத்தில் தன் செலவுகளுக்காக, பிறரிடம் கையேந்தினார். சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்த பலரும் உதவி வருகின்றனர். விலங்குகள் நலனுக்காக எனது பாதயாத்திரை தொடரும். தனக்கு கிடைக்கும் பிஸ்கட்கள் அனைத்தையும் தன்னுடன் இருக்கும் பைரவாவுக்கு மட்டும் கொடுப்பதில்லை. பாதயாத்திரையின் போது மற்ற தெரு நாய்களுக்கும் வழங்குகிறார்.
11_Article_0001, 11_Article_0002
நடக்க சிரமப்பட்ட நாயை, தன் தோளில் சுமந்து செல்கிறார். (அடுத்த படம்) சமூக ஆர்வலர்கள் வழங்கிய 'வீல் சேரில்' நாயை வைத்து தள்ளி சென்ற சுமந்த் அஸ்வின்
- நமது நிருபர் -.