/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன் மாதிரியாக திகழும் 'வந்தே மாதரம் டிரஸ்ட்' முன் மாதிரியாக திகழும் 'வந்தே மாதரம் டிரஸ்ட்'
முன் மாதிரியாக திகழும் 'வந்தே மாதரம் டிரஸ்ட்'
முன் மாதிரியாக திகழும் 'வந்தே மாதரம் டிரஸ்ட்'
முன் மாதிரியாக திகழும் 'வந்தே மாதரம் டிரஸ்ட்'
ADDED : மே 10, 2025 11:40 PM

இன்றைய காலத்தில் நான், எனது என்ற சுயநல மனப்போக்குடன் வாழ்வோரே அதிகம். இவர்களுக்கு இடையே மக்களுக்கு தொண்டு செய்வதன் மூலம், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் மக்களும் உள்ளனர்.இதில் வந்தே மாதரம் டிரஸ்ட்டும் ஒன்றாகும்.
பொதுவாக கோடை விடுமுறை துவங்கினால், தனியார் நிறுவனங்கள் பள்ளி சிறார்களுக்கு கோடை முகாம் ஏற்பாடு செய்வர். நீச்சல், கராத்தே, கிரிக்கெட், மாடர்ன் ஆர்ட் உட்பட, பல்வேறு பயிற்சிகள் நடத்துவர்.
இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, தங்களின் பிள்ளைகள் அனைத்து கலைகளும் கற்க வேண்டும் என, நினைத்து ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி, பயிற்சி வகுப்புகளில் சேர்க்கின்றனர்.
ஆனால் ஏழைகளால் அவ்வளவு பணம் செலவிட முடியாது. பிள்ளைகளுக்கு ஆசை, திறமை இருந்தாலும் பயிற்சி பெற, பணம் தடையாக இருக்கும்.
இத்தகைய சிறார்களின் நலனுக்காக, சிக்கமகளூரின் வந்தே மாதரம் டிரஸ்ட், சிறார்களுக்கு கோடை முகாம் நடத்துகிறது. இதில் 40 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.
விபத்து ஏற்படும் போது, காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது பற்றியும், தினம் ஒரு மணி நேரம் செயல் முறை பயிற்சி அளிக்கின்றனர். இது சிறார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கல்வி சாரா பயிற்சிகளுடன், தேசபக்தி, சனாதன கலாசாரம் உட்பட பல்வேறு நல்ல விஷயங்களையும் டிரஸ்ட் கற்று தருகிறது.
தேச தலைவர்களின் வாழ்க்கையை உதாரணம் காண்பித்து, சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதன் மூலம் சிறார்களுக்கு இளம் வயதில் இருந்தே, தேச பக்தி, கலாச்சாரம், பண்பாடுகளை போதிக்கின்றனர்.
வந்தே மாதரம் டிரஸ்ட், பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறது. பணத்தை விட கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சிறார்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கும் இந்த சேவை பாராட்டத்தக்கது.
இது மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளது.
- நமது நிருபர் -