/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
ADDED : ஜூன் 10, 2025 02:30 AM
கோடிஹள்ளி: காதல் தோல்வியால் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு, ஹெப்பாலின் சிவசங்கரா லே - அவுட்டில் வசித்தவர் முனிராஜு, 22. இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றினார். நேற்று முன் தினம் இரவு, நண்பரை பார்த்து விட்டு வருவதாக, தாயிடம் கூறிவிட்டு பைக்கில் வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை.
நள்ளிரவு தாண்டியும் மகனை காணாமல், கலக்கம் அடைந்த தாய், மகனின் மொபைல் போனுக்கு பல முறை அழைத்தும் எடுக்கவில்லை.
இந்நிலையில் விமான நிலைய சாலையில், மேம்பாலத்தின் கீழே உள்ள மால் ஆப் ஏஷியா முன் நேற்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் படுகாயத்துடன் இறந்து கிடந்தார். இவ்வழியாக சென்ற சிலர், இதை கவனித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த கோடிஹள்ளி போலீசார், இளைஞரின் உடலை மீட்டனர். அவர் பாக்கெட்டில் இருந்த அடையாள ஆவணங்களை வைத்து, விசாரித்தபோது அவர், முனிராஜு என்பது தெரிந்தது. அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில், இளம்பெண் ஒருவரை முனிராஜு காதலித்ததும், கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்ததும் தெரிய வந்தது. அந்த பெண் வேறு ஒரு இளைஞரை காதலிக்க ஆரம்பித்ததால் மனமுடைந்து முனிராஜு, தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
அவரது தற்கொலைக்கு, காதல் தோல்வியே காரணம் என்பது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.