/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதல்வர் நாற்காலி சண்டை விஸ்வரூபமாகுமா? முதல்வர் நாற்காலி சண்டை விஸ்வரூபமாகுமா?
முதல்வர் நாற்காலி சண்டை விஸ்வரூபமாகுமா?
முதல்வர் நாற்காலி சண்டை விஸ்வரூபமாகுமா?
முதல்வர் நாற்காலி சண்டை விஸ்வரூபமாகுமா?
ADDED : ஜூன் 04, 2025 12:38 AM
கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியில் கூச்சல் குழப்பத்துக்கு பஞ்சமில்லை. முதல்வரை மேடையில் வைத்து கொண்டே, இவர் தான் அடுத்த முதல்வர் என கூறுவது; முக்கியமான அறிவிப்புகளை முதல்வருக்கு முன்னரே துணை முதல்வர் அறிவிப்பது என சொல்லிக் கொண்டே போகாலம்.
இதற்கெல்லாம் காரணம் முதல்வர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே நடக்கும் மோதலே. இந்த மோதல் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி 'ஆப்பரேஷன் லோட்டஸை' செயல்படுத்த பா.ஜ., திட்டமிட்டது. ஆனால், பா.ஜ.,விற்குள் இருந்த கோஷ்டி பூசலால், சரியாக உபயோகப்படுத்த முடியவில்லை.
தற்போது எத்னால், சோமசேகர், சிவராம் ஹெப்பர் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநில பா.ஜ.,வில் எந்த கூச்சலும், குழப்பமும் இல்லை என தெரிகிறது.
ராஜதந்திரி
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த உள்துறை அமைச்சரும், அரசியல் வட்டாரத்தில் ராஜ தந்திரி என அழைக்கப்படும் அமித் ஷா, மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வாலுக்கு அடிக்கடி அறிவுரை வழங்கி வருகிறார்.
சமீபத்தில் அமித் ஷா, மேலிட பொறுப்பாளருக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளார். இது குறித்து, சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதற்கும் தயார்
மாநில பா.ஜ.,வில் உள்ள கோஷ்டி மோதல்கள் தவிர்ப்பு, தலைவர்கள் ஒற்றுமை, மாநில காங்கிரசில் உள்ள சூழ்நிலையை, சாதகமாக பயன்படுத்த திட்டங்கள் என பல வியூகங்களை வகுத்து கொடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி, பா.ஜ., தலைவர்களிடம் நெருக்கமாக இருக்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எந்த நேரத்திலும், எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என கூறி உள்ளாராம்.
ஆக, முதல்வர் மாற்றம் விஷயத்தில் குளறுபடி நடக்குமா... காங்கிரசில் எப்போது பெரிதாக சண்டை வெடிக்கும்; அதை எப்படி பயன்படுத்துவது என கழுகு போல் பா.ஜ., காத்திருக்கிறது.
- நமது நிருபர் -