Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர் யார்? 'ஹனிடிராப்' குறித்து அமைச்சர் எம்.பி.பாட்டீல் கேள்வி

கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர் யார்? 'ஹனிடிராப்' குறித்து அமைச்சர் எம்.பி.பாட்டீல் கேள்வி

கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர் யார்? 'ஹனிடிராப்' குறித்து அமைச்சர் எம்.பி.பாட்டீல் கேள்வி

கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர் யார்? 'ஹனிடிராப்' குறித்து அமைச்சர் எம்.பி.பாட்டீல் கேள்வி

ADDED : மார் 22, 2025 08:48 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு : ''ஹனிடிராப் பின்னணியில் உள்ள கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர் யார்?'' என, மாநில தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கேள்வி எழுப்பினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

யாரை 'ஹனிடிராப்' செய்தாலும், அது தவறு தான். பா.ஜ.,வினரை ஹனிடிராப் செய்தாலும், காங்கிரசாரை செய்தாலும் தவறு தான்.

ஹனிடிராப் பின்னணியில் உள்ள கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில், எங்களுக்கு ஏன் தர்மசங்கடம் ஏற்பட வேண்டும்? முதல்வர், உள்துறை அமைச்சர் விசாரணை நடத்துவர்.

அமைச்சர் மது பங்காரப்பாவின் இல்லத்தில் நடந்த டின்னர் மீட்டிங்குக்கு, நாங்கள் சென்றால் என்ன தவறு? நேற்று முன் தினம் என் வீட்டில் ஐந்தாறு அமைச்சர்கள் சேர்ந்து சாப்பிட்டோம். அதில் தவறு என்ன? பா.ஜ.,வினரும் கூட இருந்தனர். எங்கள் கட்சியினரும் இருந்தனர்.

இதற்கு முன்பு என் வீட்டில் நடந்த விருந்துக்கு, அசோக் வந்திருந்தார். அவரது வீட்டில் நடந்த விருந்துக்கு நான் சென்றிருந்தேன். நாங்கள் 37 லிங்காயத் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து சாப்பிடுவதில், எந்த தவறும் இல்லை.

வரும் நாட்களிலும், இது போன்று சேர்ந்து சாப்பிடுவோம். பசவண்ணர், சமுதாயம் விஷயமாக விவாதிப்போம். நாங்கள் இருக்கிறோம் என்பதை, லிங்காயத் சமுதாயத்தினருக்கு உணர்த்துவோம்.

வீரேந்திர பாட்டீலுக்கு பின், காங்கிரசில் லிங்காயத் சமுதாயத்தினர் முதல்வராகவில்லை. தலித்துகள், பிற்பட்டோர், லிங்காயத் சமுதாயத்தினருக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். தற்போதைக்கு முதல்வர் இடம் காலியாக இல்லை. எங்கள் கட்சி மேலிடம், அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, முதல்வரை தேர்வு செய்யும். தாங்களாகவே சுயமாக முதல்வர் என, அறிவித்து கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us