Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'தக் லைப்' வெளியிட மாட்டோம்! கர்நாடக விநியோகஸ்தர் அறிவிப்பு

'தக் லைப்' வெளியிட மாட்டோம்! கர்நாடக விநியோகஸ்தர் அறிவிப்பு

'தக் லைப்' வெளியிட மாட்டோம்! கர்நாடக விநியோகஸ்தர் அறிவிப்பு

'தக் லைப்' வெளியிட மாட்டோம்! கர்நாடக விநியோகஸ்தர் அறிவிப்பு

ADDED : ஜூன் 19, 2025 03:29 AM


Google News
பெங்களூரு: “தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம்,” என, அந்த படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலாகர் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் சேர்ந்து தயாரித்த, 'தக் லைப்' திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்று கூறினார். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது.

'கமல் மன்னிப்பு கேட்டால் தான் திரைப்படத்தை வெளியிடுவோம்' என, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. ஆனால் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிட்டது.

நோட்டீஸ்


இந்த உத்தரவின் எதிரொலியாக, கன்னட அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் வீட்டிற்கு, நேற்று காலை போலீசார் சென்றனர்.

'தக் லைப் திரைப்படம் வெளியிடும் தியேட்டர்கள் முன், போராட்டம் நடத்த கூடாது. தேவைப்பட்டால் பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம்' என கூறினர்.

இதுகுறித்து ரக் ஷன வேதிகே அமைப்பின் பிரவீன் ஷெட்டி கூறுகையில், ''தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. நீதிமன்ற முடிவை நாம் கேள்வி எழுப்ப முடியாது. இங்கு படம் வெளியிடப்படுமா என்று தெரியவில்லை.

''திரைப்பட வர்த்தக சபை, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்குள் கன்னட அமைப்புகளின் தலைவர்கள் வீடுகளுக்கு சென்று, போலீசார் நோட்டீஸ் கொடுக்கின்றனர்.

''இங்கு திரைப்படம் வெளியிடப்பட்டால், நாங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்ப்போம். கன்னடர்கள் பணம், கமலுக்கு செல்லட்டும்,'' என்றார்.

எங்கள் அனுமதி


இந்நிலையில், தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட உரிமை பெற்ற வெங்கடேஷ் கமலாகர் நேற்று கூறுகையில், ''தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம்.

''இதற்கு பல காரணங்கள் உள்ளன. படத்தை கர்நாடகாவில் வெளியிடும் உரிமையை நான் வாங்கினேன். ஆனால், படம் தமிழகத்தில் கூட சிறப்பாக ஓடவில்லை.

''இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால், அந்த படம் குறைந்தது இரண்டு வாரங்கள் ஓட வேண்டும்.

''தக் லைப் தமிழகத்தில் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் சரியாக ஓடவில்லை. தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட விரும்பினால், வேறு விநியோகஸ்தர் மூலம் முயற்சிக்கலாம். ஆனால், எங்களிடம் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us