/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கூகுள் மேப்'பை நம்பி சேற்றில் சிக்கிய வேன் 'கூகுள் மேப்'பை நம்பி சேற்றில் சிக்கிய வேன்
'கூகுள் மேப்'பை நம்பி சேற்றில் சிக்கிய வேன்
'கூகுள் மேப்'பை நம்பி சேற்றில் சிக்கிய வேன்
'கூகுள் மேப்'பை நம்பி சேற்றில் சிக்கிய வேன்
ADDED : மே 21, 2025 11:05 PM

சிக்கமகளூரு: கூகுள் மேப் நம்பி வந்திருந்த சுற்றுலா பயணியர், 'டெம்போ டிராவலர்' வேனை நிலத்தில் இறக்கிவிட்டு அவதிப்பட்டனர்.
இன்றைய தொழில்நுட்ப உலகில், எந்த இடத்துக்கு செல்ல வேண்டுமென்றாலும், மொபைல் போனில் கூகுள் மேப் பார்த்து செல்வோர் அதிகம்.
சில நேரங்களில் கூகுள் மேப் தவறான வழியை காட்டி, அவதிப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கிறது. இதே போன்ற சம்பவம், சிக்கமகளூரில் நடந்தது.
பெங்களூரை சேர்ந்த சுற்றுலா பயணியர், டெம்போ டிராவலர் வேனில் சிக்கமகளூருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். ஓட்டுநர் கூகுள் மேப் பார்த்து, வாகனத்தை செலுத்தினார்.
நேற்று காலை பாளஹொன்னுார் வழியாக, மூடிகெரேவை நோக்கி செல்லும் மேப் தவறான வழி காட்டியதில், ஆல்துார் கிராமம் அருகில் உள்ள சேற்றுக்குள் வாகனத்தை இறக்கி விட்டார்.
சேற்றில் வேன் சிக்கி கொண்டது. வெளியே எடுக்க முடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சுற்றுலா பயணியர் அவதிப்பட்டனர்.
இதை கண்ட அப்பகுதியினர், உதவிக்கு வந்து, டிராக்டரில் வேனை கட்டி, சாலைக்கு இழுத்து வந்தனர். அதன்பின் அவர்களிடம் சரியான வழியை தெரிந்து கொண்டு, சுற்றுலா பயணியர் கிளம்பினர்.