/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லட்சுமி தேவி கோவிலில் திருட்டு பம்பா சரோவர் பக்தர்கள் வருத்தம் லட்சுமி தேவி கோவிலில் திருட்டு பம்பா சரோவர் பக்தர்கள் வருத்தம்
லட்சுமி தேவி கோவிலில் திருட்டு பம்பா சரோவர் பக்தர்கள் வருத்தம்
லட்சுமி தேவி கோவிலில் திருட்டு பம்பா சரோவர் பக்தர்கள் வருத்தம்
லட்சுமி தேவி கோவிலில் திருட்டு பம்பா சரோவர் பக்தர்கள் வருத்தம்
ADDED : மே 21, 2025 11:05 PM

கொப்பால்: வரலாற்று பிரசித்தி பெற்ற, பம்பா சரோவரின் லட்சுமி கோவிலில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின் ஆனேகுந்தி அருகில் பம்பா சரோவரில் லட்சுமி தேவி கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது.
தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
நேற்று முன் தினம் முழுதும் பெய்த மழையால் ஆனேகுந்தி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கியது. இச்சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள், நள்ளிரவில் பம்பா சரோவர் லட்சுமி தேவி கோவிலுக்கு வந்து உள்ளனர்.
பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பிரபாவளி, கால் கிலோ எடையுள்ள வெள்ளி பாதுகைகள், 2 கிலோ எடையுள்ள வெள்ளி மணியை திருடிக்கொண்டு தப்பியோடினர்.
அர்ச்சகர் ஆனந்த் வழக்கம் போன்று, நேற்று காலையில், பூஜை செய்ய கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பது தெரிந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த கங்காவதி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மர்மநபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
'இவ்வளவு பிரசித்தி பெற்றிருந்தும், கோவிலுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், செயல்படவில்லை. இதை நோட்டம் விட்டு திருடர்கள் கோவிலுக்குள் புகுந்து திருடியுள்ளனர்.
'இதற்கு கோவில் நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம்' என, பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். திருடர்களை கண்டுபிடித்து, பொருட்களை மீட்கும்படி வலியுறுத்துகின்றனர்.