/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு அரச குடும்பத்தினரை சோப் துாதராக்க வலியுறுத்தல் மைசூரு அரச குடும்பத்தினரை சோப் துாதராக்க வலியுறுத்தல்
மைசூரு அரச குடும்பத்தினரை சோப் துாதராக்க வலியுறுத்தல்
மைசூரு அரச குடும்பத்தினரை சோப் துாதராக்க வலியுறுத்தல்
மைசூரு அரச குடும்பத்தினரை சோப் துாதராக்க வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 12:25 AM
பெங்களூரு : மைசூரு சாண்டல் சோப்புக்கு, மைசூரு அரச குடும்பத்தினரே துாதராக இருக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
கர்நாடக அரசு சார்ந்த, மைசூரு சோப் நிறுவனத்தின் உற்பத்திகள் குறித்து, பிரசாரம் செய்ய பன்மொழி நடிகை தமன்னாவை நியமித்து, தொழிற் மற்றும் வர்த்தக துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர், கன்னட அமைப்பினர் உட்பட, பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மைசூரு சாண்டல் சோப்புக்கு, மைசூரு அரச குடும்பத்தினரை துாதராக இருக்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மைசூரின் மேம்பாட்டுக்கு அரச குடும்பத்தினரின் பங்களிப்பு அபாரம். எனவே யதுவீர் உடையாரை மைசூரு சாண்டல் சோப்புக்கு துாதராக்க வேண்டும் என, சமூக வலைதளங்கள் மூலம் வலியுறுத்துகின்றனர்.