/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.பி.ஐ., ஊழியர்களுக்கு கன்னட பயிற்சி வகுப்பு எஸ்.பி.ஐ., ஊழியர்களுக்கு கன்னட பயிற்சி வகுப்பு
எஸ்.பி.ஐ., ஊழியர்களுக்கு கன்னட பயிற்சி வகுப்பு
எஸ்.பி.ஐ., ஊழியர்களுக்கு கன்னட பயிற்சி வகுப்பு
எஸ்.பி.ஐ., ஊழியர்களுக்கு கன்னட பயிற்சி வகுப்பு
ADDED : மே 26, 2025 12:25 AM
பெங்களூரு : ஆனேக்கல் தாலுகா, சூர்யா நகரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் பெண் மேலாளர் கன்னடத்தில் பேச முடியாது என கூறி வாடிக்கையாளரிடம் 20ம் தேதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது வீடியோவாக இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், வங்கி மேலாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு முதல்வர் வாழ்த்துத் தெரிவித்து, 'வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள், பிராந்திய மொழிகளை பேச வேண்டும்' என அறிவுறுத்தினார்.
இதையடுத்து, மாநிலத்தில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரும் 28ம் தேதி முதல் கன்னடம் கற்றுத்தர எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை 60 நிமிடங்கள், ஆன்லைன் வாயிலாக கன்னடம் கற்றுத்தரப்படும். தொடர்ந்து ஆறு மாதங்கள் நடக்க உள்ளது. இதை வங்கியின் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதில், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
கன்னடம் கற்றுக் கொள்வதால், வாடிக்கையாளர்களின் தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்ய முடியும். அதே சமயம், வங்கியின் மீதான புகார்களும் குறையும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.