ADDED : ஜூன் 08, 2025 10:43 PM
ஆர்.சி.பி., வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கப்பன் பார்க்கில் மரங்களை கிரிக்கெட் ரசிகர்கள் சேதப்படுத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில், கப்பன் பார்க்கில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் சங்க தலைவர் உமேஷ் நேற்று அளித்த புகாரில், 'ஆர்.சி.பி., வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 4ம் தேதி விதான் சவுதா முன் கூடிய ரசிகர்கள், விதான் சவுதா எதிரே உள்ள மரத்தின் மீது ஏறி செடிகளை உடைத்துள்ளனர்.
'கப்பன் பார்க்கிலும் நுழைந்து அங்கு இருந்த செடி, கொடிகளை சேதப்படுத்தி உள்ளனர். விதான் சவுதா தோட்ட பகுதியின் இரும்பு வேலியை உடைத்ததுடன், வண்ண விளக்குகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.
'சின்னசாமி மைதானத்தின் நுழைவுவாயில் கேட் நம்பர் 3ஐ உடைத்துள்ளனர். இதுதொடர்பாக ரசிகர்கள், விதான் சவுதா முன் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த தலைமை செயலர் ஷாலினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி உள்ளார்.
சில சிடிக்களை ஆதாரங்களாக அவர் வழங்கி உள்ளார்.