/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரசிகர்கள் விட்டு சென்ற செருப்புகள் மின் உற்பத்திக்கு அனுப்பிய மாநகராட்சி ரசிகர்கள் விட்டு சென்ற செருப்புகள் மின் உற்பத்திக்கு அனுப்பிய மாநகராட்சி
ரசிகர்கள் விட்டு சென்ற செருப்புகள் மின் உற்பத்திக்கு அனுப்பிய மாநகராட்சி
ரசிகர்கள் விட்டு சென்ற செருப்புகள் மின் உற்பத்திக்கு அனுப்பிய மாநகராட்சி
ரசிகர்கள் விட்டு சென்ற செருப்புகள் மின் உற்பத்திக்கு அனுப்பிய மாநகராட்சி
ADDED : ஜூன் 08, 2025 10:42 PM

பெங்களூரு : சின்னசாமி விளையாட்டு அரங்கில், மூன்று நாட்களாக 350 கிலோ செருப்புகளை, பெங்களூரு மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் அகற்றியுள்ளனர். அவை மின்சாரம் தயாரிக்க அனுப்பப்பட்டுள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிர் பிழைத்தால் போதும் என, நினைத்து ஆயிரக்கணக்கான தலைதெறிக்க ஓடினர்.
அவர்கள், தங்களின் செருப்புகளை விட்டுச் சென்றனர். குவிந்து கிடக்கும் செருப்புகளை கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் அகற்றினர்.
இதுவரை 350 கிலோவுக்கும் மேற்பட்ட செருப்புகளை சேகரித்து, கே.பி.சி.எல்., எனும் கர்நாடக பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ராம்நகரின் பிடதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி சிவாஜி நகர் பிரிவு உதவி செயல் நிர்வாக பொறியாளர் அபிலாஷ் கூறியதாவது:
அசம்பாவிதத்துக்கு பின், சிவாஜி நகர், சாந்தி நகரின் மாநகராட்சி திடக்கழிவு பிரிவுகள், செருப்புகளை சேகரிக்க தனிக்குழு அமைத்தன. பணியை மேற்பார்வையிட மார்ஷல்களை நியமித்திருந்தது. சின்னசாமி விளையாட்டு அரங்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பொருத்தியிருந்த பேனர், பிளக்ஸ்கள், கிழிந்த உடைகளை அப்புறப்படுத்த, தனி ஆட்டோ டிப்பர்கள் பயன்படுத்தப்பட்டன.
விளையாட்டு அரங்கின் சுற்றுப்பகுதி, அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டன. இவ்வளவு அதிகமான செருப்புகளை பார்ப்பது, இதுவே முதன் முறை.
செருப்பு கழிவுகளை பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் வசதி இல்லையென்றால், இவ்வளவு செருப்புகளும் குப்பையில் சேர்ந்து மண்ணோடு, மண்ணாகியிருக்கும். இப்போது மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.