/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வனத்துறை ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி வனத்துறை ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
வனத்துறை ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
வனத்துறை ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
வனத்துறை ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
ADDED : செப் 20, 2025 11:08 PM
பெங்களூரு:''வனத்துறையில் ஆர்வமுள்ள ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி அளிக்க வேண்டும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
ஷிவமொக்கா மாவட்டம், மலாலிகொப்பா கிராமத்தை சேர்ந்த பாம்பு பிடிப்பவர் இர்பான். இவர், தன் வீட்டில் சட்ட விரோதமாக மூன்று மலைப் பாம்புகளை அடைத்து வைத்திருந்தார். இதை அறிந்த பத்ராவதி வன அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அவர்களுக்கு பாம்பு பிடிக்க தெரியாததால், தனியார் பாம்பு பிடி வீரருக்காக காத்திருக்க நேரிட்டது. அவர்கள் வந்த பின்பே பாம்புகள் பிடிக்கப்பட்டன. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. வனத்துறையினருக்கே பாம்பு பிடிக்க தெரியவில்லையே என, பலரும் கிண்டல் செய்தனர்.
இதையடுத்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அளித்த உத்தரவு:
அனைத்து வனப்பகுதிகளிலும் பாம்புகளை பிடிப்பதற்கு ஐந்து வன ஊழியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். வனத்துறையில் ஆர்வமுள்ளோருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
ராஜநாகம் போன்ற பாம்புகள் வீடுகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்துவிட்டால் வனத்துறை ஊழியர்களே அகற்ற வேண்டும். ஒரு வேளை ராஜநாகத்தை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் இல்லையென்றால், பதிவு செய்யப்பட்ட தனியார் பாம்பு பிடி வீரர்களை அழைத்து கொள்ளலாம்.
மூத்த வன அதிகாரிகள் முன்னிலையிலே அவர்கள் பாம்பை பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் அனுமதியின்றி பாம்புகளை கொண்டு செல்ல கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.