/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்., ரூரல் கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் அறிமுகம் பெங்., ரூரல் கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் அறிமுகம்
பெங்., ரூரல் கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் அறிமுகம்
பெங்., ரூரல் கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் அறிமுகம்
பெங்., ரூரல் கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் அறிமுகம்
ADDED : ஜூன் 12, 2025 11:10 PM
பெங்களூரு: சுற்றுலாத்துறை மற்றும் கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன் சார்பில், பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு மக்களை அழைத்துச் செல்லும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின் கோட்டை, தொட்டபல்லாபூரின் காடி சுப்ரமணயர் கோவில், சிக்கமதுரேவின் சனி மகாத்மா கோவில், நெலமங்களா தாலுகாவின், சிவகங்கையின் கங்காதரேஸ்வரா, ஹொன்னாதேவி கோவில் உட்பட, பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள கோவில்களை தரிசிக்கலாம்.
கோவில்களை தரிசிக்க விரும்புவோர், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். யஷ்வந்த்பூரின், கே.எஸ்.டி.டி.சி., அலுவலகத்தில் இருந்து, தினமும் காலை 7:00 மணிக்கு கோவில் தரிசன பஸ் புறப்படும்.
காலை 8:30 மணிக்கு தேவனஹள்ளி கோட்டையை அடையும். 10:00 மணிக்கு காடி சுப்ரமண்யர் கோவிலுக்கும், 11:45 மணிக்கு சிக்கமதுரே மற்றும் சனி மகாத்மா கோவிலுக்கும் செல்லும். மதிய உணவுக்கு 1.30 மணி முதல் 2:00 மணி வரை இடைவேளை இருக்கும்.
மதியம் 2:30 சிவகங்கையின் கங்காதரேஸ்வரா மற்றும் ஹொன்னாதேவி கோவிலை தரிசித்த பின் 6:00 மணிக்கு யஷ்வந்த்பூரின் கே.எஸ்.டி.டி.சி., அலுவலகத்துக்கு திரும்பும். ஒரு நாள் சுற்றுலா பேக்கேஜுக்கு, ஒருவருக்கு 830 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவில் சுற்றுலா செல்ல விரும்புவோர், கே.எஸ்.டி.டி.சி.,யின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.kstdc.coல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 080 - 4334 4334, 89706 50070 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.