/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாபா உரிமையாளர் உட்பட மூவர் நள்ளிரவில் சரமாரி வெட்டி கொலை தாபா உரிமையாளர் உட்பட மூவர் நள்ளிரவில் சரமாரி வெட்டி கொலை
தாபா உரிமையாளர் உட்பட மூவர் நள்ளிரவில் சரமாரி வெட்டி கொலை
தாபா உரிமையாளர் உட்பட மூவர் நள்ளிரவில் சரமாரி வெட்டி கொலை
தாபா உரிமையாளர் உட்பட மூவர் நள்ளிரவில் சரமாரி வெட்டி கொலை
ADDED : ஜூன் 26, 2025 12:54 AM
கலபுரகி : தாபாவில் நுழைந்து மூவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
கலபுரகி புறநகரின், பட்னா கிராமத்தில் வசித்தவர் சித்தரூடா, 35. இவர் இதே கிராமத்தில் தாபா நடத்துகிறார்.
இந்த தாபாவில் உறவினர்கள் ஜெகதீஷ், 28, ராமசந்திரா, 45, பணியாற்றி வந்தனர். ஜெகதீஷ் மேனேஜராகவும், ராமசந்திரா சமையல் ஊழியராகவும் பணியாற்றினர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில், மூவரும் தாபாவில் பணியில் இருந்தனர். சில வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது 10 முதல் 12 பேர் கொண்ட மர்ம கும்பல், தாபாவுக்குள் புகுந்து சித்தரூடா, ஜெகதீஷ், ராமசந்திராவை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது.
தப்பியோட முயற்சித்தும் விடாமல், விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
சம்பவத்தை கண்டு, அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சபர்மன் போலீசார், மூவரின் உடல்களை மீட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த சுற்றுப்பகுதிகளின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கொலை தொடர்பாக ஏழு பேரை நேற்று மதியம் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக மூன்று கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி, சோமு ராத்தோட் என்பவர், இந்த தாபாவுக்கு வந்தார். இரண்டு பீர் பாட்டில்களை வாங்கினார்.
இதற்கு பணம் செலுத்தும் விஷயத்தில், தாபா உரிமையாளர் சித்தரூடாவுடன் தகராறு செய்தார். அப்போது சித்தரூடாவும், ஜெகதீஷும், மற்றவர்களும் சோமு ராத்தோடை தாக்கி கொலை செய்தனர். உடலை கலபுரகி புறநகரில் வீசினர்.
கொலை தொடர்பாக, சித்தரூடா, ஜெகதீஷ் உட்பட சிலர் கைதாகினர். சமீபத்தில் ஜாமினில் விடுதலையான சித்தரூடா, மீண்டும் தாபா நடத்தினார். சோமு ராத்தோட் கொலைக்கு பழி வாங்கும் நோக்கில், மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.