Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'பாக்., விவகாரத்தில் அரசியல் கிடையாது'

'பாக்., விவகாரத்தில் அரசியல் கிடையாது'

'பாக்., விவகாரத்தில் அரசியல் கிடையாது'

'பாக்., விவகாரத்தில் அரசியல் கிடையாது'

ADDED : மே 11, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
ஹூப்பள்ளி: ''பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்விஷயத்தில் எக்காரணம் கொண்டும் அரசியல் கலக்கப்படாது,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.

ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நம் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். பாகிஸ்தானை தாக்குவதற்கு மத்திய அரசு ஏற்கனவே நம் ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தை அளித்து உள்ளது. இவ்விஷயத்தில், எக்காரணம் கொண்டும் அரசியல் கலக்கப்படாது.

பாக்., இரட்டை நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. பாக்., அரசின் கட்டளைகளை அந்நாட்டு ராணுவம் கேட்பதில்லை. இது, மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. 1980க்கு பிறகு பல பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்து உள்ளன. பெரிய அளவில் பயங்கரவாத நடவடிக்கைகளின் போதும், நம் தரப்பில் லேசான பதிலடியே கொடுக்கப்பட்டது.

தற்போது முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அதற்காக தாக்குதல்கள் நடந்தால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிருப்தி


கர்நாடக சட்ட மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி சிக்கோடியில் நேற்று அளித்த பேட்டி:

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானை, முற்றிலுமாக அழித்திருக்க வேண்டும். தாக்குதல் நிறுத்தப்பட்ட பின், மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்துகின்றனர். யாருடைய பேச்சையோ கேட்டு, பாகிஸ்தானுடன் நடத்திய தாக்குதலை நிறுத்தியது தவறு.

பாகிஸ்தான் நமக்கு எப்போதும் எதிரிதான். அந்நாட்டினர் நமக்கு நல்லது செய்ய மாட்டார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமாதான பேச்சில், மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார். அமெரிக்கா சம்பந்தப்பட்ட விஷயங்களில், நாம் ஏதாவது ஆலோசனை கூறினால், அவர் கேட்பாரா.

பிரதமர் நரேந்திர மோடி, திடமான, கடினமான முடிவை எடுத்திருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சை கேட்டது தவறு. அனைத்து நாடுகளும் சேர்ந்து மாநாடு நடத்தி, பயங்கரவாதிகளை அழித்து, நாட்டை சுத்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us