Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமி பலாத்காரம் சித்தப்பாவுக்கு 'ஆயுள்'

சிறுமி பலாத்காரம் சித்தப்பாவுக்கு 'ஆயுள்'

சிறுமி பலாத்காரம் சித்தப்பாவுக்கு 'ஆயுள்'

சிறுமி பலாத்காரம் சித்தப்பாவுக்கு 'ஆயுள்'

ADDED : மே 11, 2025 11:21 PM


Google News
கலபுரகி: கலபுரகி நகரின், பைல் தாண்டாவின் நந்துாரா - கே கிராமத்தில், 19 வயது வாலிபர் வசிக்கிறார். இதே கிராமத்தில் இவரது உறவினர் வசிக்கிறார். இவருக்கு, 15 வயது மகள் உள்ளார். இந்த சிறுமிக்கு வாலிபர் சித்தப்பா முறை வேண்டும்.

வாலிபரின் தந்தை, சிறுமியின் தந்தையிடம், 'உங்கள் மகளை, என் மகனுக்கு திருமணம் செய்து தாருங்கள்' என, கேட்டார். அப்போது சிறுமியின் தந்தை கோபமடைந்து, 'உறவில் சித்தப்பாவாக இருப்பவருக்கு, மகளை கேட்கிறீர்களா' என, திட்டி விரட்டினார். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 2024 ஆகஸ்ட் 9ம் தேதி, சிறுமி தனியாக இருந்தார். இதை கவனித்த வாலிபர், சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். இது பற்றி, தன் தந்தையிடம் சிறுமி கூறினார். அவர், பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார், வாலிபரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விசாரணையை முடித்து கலபுரகி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில், வாலிபரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 30,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி யமனப்பா பம்மனகி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us