யார் இன்; யார் அவுட்?
ஒ ருவழியாக கருப்புக் கோட்டு சங்கத்துக்கு தேர்தல் தேதி குறிச்சாச்சு. ஓட்டுக்கு கேன்வாஸ் பேரமும் தொடங்கியாச்சு. இத்தேர்தலால் யார் இன்? யார் அவுட் என்பதே கேள்வி.
வாய் பந்தல் உதவுமா?
தொ ழிற்பூங்கா ஏற்படுத்தப் போவதாக அசெம்பிளிக்காரர் மேடைக்கு மேடை சொல்லிக் கொண்டு இருப்பது போல, செங்கோட்டையின் புல்லுக்கட்டுக்காரரும் தமது பங்குக்கு ரெண்டு தொழிற்சாலையை ஏற்படுத்தப்போவதாக கோல்டு சிட்டியில் உறுதி அளித்துள்ளார்.
குடிநீர் பஞ்சம் தீர்க்கப்படுமா?
தெ ன் பாலாறு நீரை ஏரியில் தேக்கி, அதை சுத்திகரிப்பு செய்து குடிநீர் வழங்கிய காலம் மறைந்து, குடிநீருக்கு தட்டுப்பாடாகி உள்ளபோது, நிரந்தர குடிநீர் தீர்வுக்கு யாரைத்தான் கேட்பது?
யாருக்காக குரு பவன்?
மு ப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக ஆசிரியர், ஆசிரியைகளுக்கான குருபவன் கட்டடம் கட்ட வேணும்னு முயற்சித்தாங்க. பழமையான ஒரு பள்ளிக்கூடம் மூடிய பின் அந்த நிலத்தில் பல லட்சம் செலவில் கட்டடம் கட்டி முடித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுக்கு பல லட்சம் செலவுல காம்பவுண்டும் கட்டினாங்க.