Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

ADDED : மார் 23, 2025 04:22 AM


Google News
Latest Tamil News
*தொடருது குழப்பங்கள்!

முனிசி.,யில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாண்டிங் கமிட்டி அமைக்காமல் காலம் தள்ளினாங்க.

முனிசி கவுன்சிலின் பதவிக் காலம் முடிய ஆறேழு மாதங்கள் மட்டுமே உள்ளபோது, திடீரென ஸ்டாண்டிங் கமிட்டி ஏற்படுத்த போறாங்களாம்.

ஏன்னா, முக்கிய நபர் இடம் தாவ போறதா அசெம்பிளி மேடமுக்கு நம்பகமான தகவல் போயிருக்கு. அவரோட அரசியல் + ஆல் இன் ஆல் நபரான ஜி..ஜி.. விருப்ப படி முக்கிய நபரை ஓடாமல் தடுக்க அணை போடும் உள் வேலையாக அந்த நபருக்கு கமிட்டி சேர்மன் பதவி தரப்போறாங்களாம்.

ஏற்கனவே துணைத்தலைவர் பதவிக்கு வாய்ப்பு தருவதாக உறுதி அளித்து ஏமாற செய்த பெண் கவுன்சிலரும் கூட ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் பதவி பெற விருப்பமாம். ஸ்டாண்டிங் கமிட்டியில் தொடருது குழப்பங்கள்.

பெமல் பகுதி உறுப்பினர் கூட, நானும் சீனியர்; எனக்கும் ஆசையிருக்கு என்கிறாராம். 'குடா' தலைவரா இருந்தவர், எனக்கு என்ன பதவி தரப் போறீங்கன்னு கேள்விகளால் துருவ துவங்கி இருக்காரு.

***

*ஊழல் ஓட்டை வெடிக்குமா?

ஓட்டுப்போட்ட ஊரு ஜனம், அறிய வேணுமாம். முனிசி.,யின் கூட்ட விபரத்தை நேரடியாக ஒளிபரப்ப, வீடியோ எடுக்க, அனுமதிக்க வேணுமாம்.

மக்கள் மத்தியில், நகர பிரச்னையில் நானும் இருக்கிறேன்னு காட்ட, பட்டும் படாமல், கண்டும் காணாமல், ஒதுங்கியபடி இருந்தவர், அரசு கவனத்துக்கு தெரிவிச்சிருக்கிறாரு.

முனிசி.,யில் ஆபீசர்கள் அடித்த 'லுாட்டி'யை கைக்கார மாநில செக்ரட்டரி அம்பலப் படுத்தி அலற விட்டிருக்காரு. அவரிடம் போய் தகவல் ஆதாரங்களை வாங்கினாலே எங்கெங்கு எவ்வளவு ஊழல் ஓட்டை உடைச்சல்கள் இருக்குதென அம்பலப் படுத்திடலாம்.

பல லட்சம் ரூபாய் கையாடல் செய்து நல்லவர் வேடமிட்டுள்ள ஆபீசர்கள் அடையாளம் காட்ட முடியுமாம்.

ஸ்டேட் நகராட்சித்துறை கவனத்திற்கு புகார் போயிருக்கு. விசாரணைக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

***

*எப்போ முடியுமோ?

மாரிகுப்பம் -- குப்பம் ரயில் பாதை இணைப்பு திட்டம் நிறைவடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ. இன்னும் எத்தனை பேருக்கு கான்ட்ராக்ட் கைமாறுமோ.

இரண்டு மாநிலத்தின் நிலப் பிரச்னை. இது மட்டுமின்றி மத்திய அரசு கட்டுப் பாட்டில் இருக்கிற கோல்டு மைன்ஸின் நிலம் இருப்பதால், தடையில்லா சான்றுக்கு தாமதம் என்றாங்க. அதெல்லாம் கூட ஓ.கே., ஆனதாவும் சொன்னாங்களே. இதுக்கு தேவையான நிதியும் கொடுத்தாச்சு என்கிறாங்களே அதுக்கப்புறமும் தாமதம் ஆகலாமா. இதை ஏன் பொறுப்பானவங்க கேட்க தயங்குறாங்கன்னு தெரியல.

கேபிடல் சிட்டியில் சுரங்க மார்க்கமாகவே மெட்ரோ ரயில் விடலையா? இதுக்காக 25 ஆண்டுகளா தேவைப்பட்டது?

மாரிகுப்பம் -- குப்பம் இணைப்பு ரயில் பாதை திட்டம் மிஞ்சி போனால் 25 கி.மீ., இருக்காது. இதுக்கு கால அளவு நிர்ணயிக்க படலையா. இது யாருடைய காலத்தில் முடிக்க போறாங்களோ?

***

*கண்ணை திறக்கணும்

கோல்டு சிட்டிக்கும் எரகோள் அணை நீர் தருவதாக, அதன் திறப்பு விழாவில் 'முதல்வர்' உறுதி அளித்தார். ஆனால் அது பற்றி மறந்துட்டாங்களோ.

கோல்டு சிட்டிக்கு போர்வெல் நீர் தான் ஆதாரமே தவிர, நிரந்தர தீர்வுக்கு என்ன வழி என்பதை ஆளுகின்ற அரசு புதுசா திட்டத்தை ஏற்படுத்தலயே

பழைய பாலாறு நீரை தேக்க பேத்தமங்களா ஏரியை தயார் செய்து சுத்திகரிப்பு செஞ்சாங்களே; அதனை வழிமறித்து திருடினதை மீட்டாலே போதும். ஏரியை துார்வாரி அந்த நீரையாவது மீண்டும் கிடைக்க செய்யலாமே, என நகரமே தாக ஏக்கத்தில் இருக்காங்க. இதுக்கு அரசு கண்ணை திறக்குமா?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us