/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வனப்பகுதியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு வனப்பகுதியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
வனப்பகுதியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
வனப்பகுதியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
வனப்பகுதியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
ADDED : மார் 23, 2025 04:07 AM

தட்சிணகன்னடா, : பெளாலு கிராமத்தில், வனப்பகுதி நடுவே வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், பெளாலு கிராமத்தின் கொடோலுகெரே வனம் உள்ளது. நேற்று காலை வனப்பகுதியின் முன்ட்கோட்டு சாலையில், பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அடர்த்தியான வனப்பகுதியில், குழந்தையின் அழுகுரல் கேட்டதால் பீதி அடைந்தார். அப்பெண், குரல் வந்த திசையில் சென்று பார்த்தார். அங்கு பச்சிளம் பெண் குழந்தை, கேட்பாரற்றுக் கிடப்பது தெரிந்தது. பிறந்து நான்கு மாதங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. குழந்தையை கிராமத்துக்கு துாக்கி வந்த அப்பெண், நடந்ததை கூறினார்.
இதுகுறித்து, தர்மஸ்தலா போலீசாருக்கும், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும், கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தை கிடைத்த இடத்தை பார்வையிட்டனர்.
மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. தற்போது கிராம பஞ்சாயத்து தலைவி வித்யா சீனிவாச கவுடாவின் பராமரிப்பில் உள்ளது.
குழந்தை வனப்பகுதியில் கொண்டு வந்து வைத்தவர்களை, கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தவறான உறவில் பிறந்த குழந்தையா அல்லது பெண் குழந்தை என்பதால் காட்டில் விட்டு விட்டுச் சென்றனரா என்பது, விசாரணை முடிவில் தெரியும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.