/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மீண்டும் மாநில அரசியல்? சோமண்ணா சூசகம் மீண்டும் மாநில அரசியல்? சோமண்ணா சூசகம்
மீண்டும் மாநில அரசியல்? சோமண்ணா சூசகம்
மீண்டும் மாநில அரசியல்? சோமண்ணா சூசகம்
மீண்டும் மாநில அரசியல்? சோமண்ணா சூசகம்
ADDED : செப் 10, 2025 02:10 AM

மாநில அரசியலுக்கு 'திரும்ப வருவேன்' என்பதை மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா சூசகமாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ., மேலிட தலைவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, 2023 சட்டசபை தேர்தலில், வருணா, சாம்ராஜ் நகர் சட்டசபை தொகுதிகளில் சோமண்ணா போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இது அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தல்படி, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், துமகூரில் சோமண்ணாவை போட்டியிட வைத்து, வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் அவருக்கு அரசியல் மறு பிரவேசம் கிடைத்தது. இதற்கு தேவகவுடாவுடனான சோமண்ணாவின் நல்லுறவும் காரணமாகும்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு, மத்திய ரயில்வே இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தில் வீரசைவ - லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவுக்கு அடுத்தபடியாக, சோமண்ணாவுக்கு செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பா.ஜ., தலைவர்களே தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் சமீபத்தில், சோமண்ணாவின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்றுள்ளது. இவரின் செயல் திறன், பா.ஜ.,வின் உயர்மட்ட தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீரசைவ - லிங்காயத்து சமூகத்தினர் மட்டுமல்ல, பிற சமூகங்களை சேர்ந்த தலைவர்களும், சோமண்ணாவை ஏற்றுக் கொண்டுள்ளனர். எடியூரப்பா போன்று, சமூகங்களின் மடாதிபதிகளிடம் நற்பெயர் பெற்றுள்ளார். இது கட்சி மேலிடத்துக்கும் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் பெங்களூரு வந்திருந்த சோமண்ணா, 'கட்சி தலைமை உத்தரவிட்டதால் துமகூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சியை செய்வேன். அதன் பின் மீண்டும் துமகூரில் போட்டியிட மாட்டேன். கட்சி மேலிடம் எனக்கு கொடுத்த வழிமுறைகளை பின்பற்றி நடப்பேன்' என்று கூறினார். இதன் மூலம் அவர் மாநில அரசியலுக்கு மீண்டும் வருவேன் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மாற்றப்பட்டால், எடியூரப்பாவை திருப்திபடுத்த, அவரது மற்றொரு மகன் ராகவேந்திராவுக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க உயர்மட்ட குழு ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -