Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ

வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ

வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ

வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ

ADDED : செப் 10, 2025 10:04 PM


Google News
Latest Tamil News
மங்களூரு: பைகாம்பாடி தொழிற் பகுதியில் உள்ள, வாசனை திரவிய தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் புறநகரில், கைகம்பாடி தொழிற் பகுதியில், 'அரோமேஜன்' என்ற வாசனை திரவியம் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், தீ மளமளவென தொழிற்சாலை முழுதும் பரவியது. தீப்பற்றியதும் அங்கிருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. பனம்பூர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீப்பிடிக்க என்ன காரணம் என்பது, தற்போதைக்கு தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us